“Interview Tips & Types 2025 – வேலைக்கான முக்கியமான Interview கேள்விகள் மற்றும் பதில்கள் தமிழில

“Interview Tips & Types 2025 – வேலைக்கான முக்கியமான Interview கேள்விகள் மற்றும் பதில்கள் தமிழில்

 Interview Tips – வேலைக்கு தேர்வு செய்யும் ரகசியங்கள்

அறிமுகம்

  • நம்ம வாழ்க்கையில வேலை interview என்பது முக்கியமான ஒன்று. எந்த Government job, private company job, அல்லது IT job ஆனாலும் interview தான் final gate. அப்போ அதைப் பாஸ் பண்ண நாம தயாராகவும், நம்பிக்கையோடவும் இருக்கணும். இப்போ நாம step by step பாப்போம்.

1. Interview க்கு முன்னாடி செய்ய வேண்டிய தயாரிப்பு

  •  Company பற்றி படிச்சு தெரிஞ்சுக்கோ (எந்த company, என்ன வேலை, என்ன product/service கொடுக்குது)
  • Resume update பண்ணிக்கோ – spelling mistake, grammar mistake இருக்கக்கூடாது
  • Dress code – neatly, formal dress பண்ணிக்கோ
  • புதிய செய்திகளும் trending technology (அந்த வேலைக்கு related ஆனது) தெரிஞ்சுக்கோ

 2. Interview Dayல் கவனிக்க வேண்டியது

  • நேரத்துக்கு குறைந்தது 30 நிமிஷம் முன்னாடி போய் உட்காரு
  • Mobile silent modeல வை
  • Friendly smile வச்சு பேசு
  • Nervousness கம்மியா வைக்க deep breath எடு

 3. Common Interview Questions & எப்படி answer பண்ணுவது

1. Tell me about yourself

Family details சொல்லாதீங்க, education + skills + work experience மட்டும் சொல்லுங்க.

2. Why should we hire you?

 “I have skills that match this job and I can contribute to company growth” மாதிரி சொல்லுங்க.

3. What are your strengths and weaknesses?

  •  Strength – Hardworking, team player, quick learner.
  •  Weakness – Over perfection (அதையும் positive மாதிரி சொல்லுங்க).

4. Where do you see yourself in 5 years?

In a responsible position where I can lead projects and contribute more”

 4. Body Language & Communication Skills

  • Eye contact maintain பண்ணணும்
  • Over action, nervous laugh avoid பண்ணணும்
  • “Thank You” சொல்ல மறக்காதீங்க
  • English க்கு தெரியலன்னாலும் confidentா simple wordsல பேசுங்க

5. Technical & HR Interview Tips

  • Technical interviewக்கு – subject basics revise பண்ணுங்க
  • HR interviewக்கு – attitude check பண்ணுவாங்க, அதனால politeா, calmா பேசுங்க

6. Interview பின் செய்ய வேண்டியது

Interview முடிஞ்சதும் politeா “Thank you for the opportunity” சொல்லுங்க

Mail மூலம் follow-up செய்யலாம்

7. Interviewல் Avoid செய்ய வேண்டிய தவறுகள்

  • ❌ Late ஆ போகக்கூடாது
  • ❌ Over confidence காட்டக்கூடாது
  • ❌ Previous company பற்றி negative பேசக்கூடாது
  • ❌ Lying in resume avoid பண்ணணும்

 8. Online Interview (Zoom/Google Meet) Tips

  • Neat backgroundல உட்காருங்க
  • Mic + Camera check பண்ணுங்க
  • Proper light faceல இருக்கணும்
  • Noise-free environment

9. Final Motivation

  • வேலை interviewன்னா அச்சப்பட வேண்டிய விஷயம் இல்லை. அது ஒரு வாய்ப்பு. Fail ஆயிட்டா கூட அது ஒரு experience. அடுத்த முறை stronga  perform பண்ண முடியும்.

Interview Types & Questions 

அறிமுகம்

  • Interview எல்லாம் ஒரே மாதிரி இல்ல. வேலையின் nature, company type, position இப்படி எல்லாம் அடிப்படையா interview style & questions மாறும். கீழே முக்கியமான interview types க்கு என்ன மாதிரி கேள்விகள் கேட்பாங்கனு பார்க்கலாம்.

1. HR Interview

 இது எல்லா வேலைக்கும் வரும். Attitude, confidence, personality check பண்ணுவாங்க.

Common Questions:

  • Tell me about yourself. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.
  • Why do you want to work in this company?  இந்த நிறுவனத்தில் ஏன் வேலை செய்ய விரும்புகிறீர்கள்?
  • What are your strengths and weaknesses?  உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?
  • Where do you see yourself in 5 years?  5 ஆண்டுகளில் உங்களை எங்கே பார்க்கிறீர்கள்?
  • Why should we hire you?   நாங்கள் ஏன் உங்களை வேலைக்கு அமர்த்த வேண்டும்?

2. Technical Interview

IT jobs, Engineering, Banking, Core jobsல வரும். Subject knowledge, technical skill check பண்ணுவாங்க.

 Common Questions:

  • Programming languages basics (C, Java, Python)  நிரலாக்க மொழிகளின் அடிப்படைகள் (C, Java, Python)
  • Database queries (SQL)    தரவுத்தள வினவல்கள் (SQL)
  • Software Testing concepts  மென்பொருள் சோதனை கருத்துக்கள்
  • Engineering related formulas, calculations  பொறியியல் தொடர்பான சூத்திரங்கள், கணக்கீடுகள்
  • Case study: “If this error occurs, how will you solve it?”  வழக்கு ஆய்வு: “இந்தப் பிழை ஏற்பட்டால், அதை எவ்வாறு தீர்ப்பீர்கள்?”

3. Group Discussion (GD)

  •  பல நிறுவனங்கள் fresher recruitmentக்கு பயன்படுத்துவாங்க. Group discussionல communication, leadership, knowledge எல்லாம் check பண்ணுவாங்க.

 Common GD Topics:

  • Is AI good or bad for jobs?  வேலைகளுக்கு AI நல்லதா கெட்டதா?
  • Social media impact on youth.  இளைஞர்களிடம் சமூக ஊடகங்களின் தாக்கம்.
  • India’s economic growth.  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி.
  • Online education vs Classroom education.  ஆன்லைன் கல்வி vs வகுப்பறை கல்வி

4. Aptitude & Written Test

Bank jobs, IT companies, Govt examsல வரும். Math + logical reasoning + English test பண்ணுவாங்க.

 Common Questions:

  • Quantitative Aptitude (Percentage, Ratio, Profit & Loss)
  • Logical Reasoning (Puzzles, Seating arrangement)
  • English Grammar (Synonyms, Antonyms, Comprehension)
  • GK & Current Affairs

5. Stress Interview

High-responsibility jobs (Police, Defense, Manager, Sales) க்கு வரும். Candidate patience & stress handling capacity check பண்ணுவாங்க.

 Common Questions:

  • Why did you get low marks in college?  கல்லூரியில் ஏன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றீர்கள்?
  • If your boss scolds you wrongly, what will you do?  உங்கள் முதலாளி உங்களைத் தவறாகத் திட்டினால், நீங்கள் என்ன செய்வீர்கள்?
  • Can you work 12 hours continuously?  நீங்கள் தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்ய முடியுமா?
  • Suddenly team member leaves, how will you handle?  திடீரென்று குழு உறுப்பினர் வெளியேறினால், நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்கள்?

 6. Panel Interview

 ஒரே நேரத்தில் பல higher officers கிட்ட face பண்ணணும். Confidence & presence of mind test பண்ணுவாங்க.

Common Questions:

  • Introduce yourself. உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • What special skill you have compared to others?  மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்களிடம் என்ன சிறப்புத் திறன் உள்ளது?
  • How can you contribute to company growth?  நிறுவன வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும்?
  • Questions from your resume (project details, achievements).  உங்கள் விண்ணப்பத்திலிருந்து கேள்விகள் (திட்ட விவரங்கள், சாதனைகள்).

 7. Online Interview (Zoom/Google Meet)

 IT companies, WFH jobs, freelancing jobs அதிகம் இதுல நடக்கும்.

Common Questions:

Why do you prefer work from home?  வீட்டிலிருந்து வேலை செய்வதை ஏன் விரும்புகிறீர்கள்?

How do you manage time without supervision?   மேற்பார்வை இல்லாமல் நேரத்தை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள்?  

Can you handle international clients in English?  சர்வதேச வாடிக்கையாளர்களை ஆங்கிலத்தில் கையாள முடியுமா? 

 8. Situational / Case Study Interview

Management, MBA jobs, Business analyst jobsல வரும். Real life problem கொடுத்து எப்படி solve பண்ணுவீங்கனு கேட்பாங்க.

Example Questions:

  • If customer is unhappy with your product, how will you convince?   உங்கள் தயாரிப்பு வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி அளித்தால், நீங்கள் எப்படி அவரை சமாதானப்படுத்துவீர்கள்?
  • If team members fight, how will you manage?   குழு உறுப்பினர்கள் சண்டையிட்டால், நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள்?  
  • If sales target not achieved, what will you do?   விற்பனை இலக்கு அடையப்படாவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

 முடிவு

Interview ஒவ்வொன்றுக்கும் அந்த வேலைக்கு ஏற்ற மாதிரி தான் கேள்விகள் வரும். அதனால நீ எந்த வேலைக்கு போறேனு decide பண்ணி அந்த interview type க்கு முன்னாடியே prepare பண்ணிக்கோ.

“Interview Tips & Types 2025 – வேலைக்கான முக்கியமான Interview கேள்விகள் மற்றும் பதில்கள் தமிழில “Interview Tips & Types 2025 – வேலைக்கான முக்கியமான Interview கேள்விகள் மற்றும் பதில்கள் தமிழில Reviewed by K on August 17, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.
About Us | Privacy Policy | Terms of Service